இலங்கையில் படிப்படியாக வணிகம் செய்வதற்கு வழி காட்டும் நூல் ஒன்றினை இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ளது. (A Step by Step Guide to Doing Business in Sri Lanka)
 
இலங்கையில் வணிக முயற்சி ஒன்றினை தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள வணிக முயற்சியினை விரிவுபடுத்த எத்தனிப்பவர்களிற்கு இலங்கையில் காணப்படும் வணிகம் சார்ந்த சட்ட திட்டங்கள் மற்றும் வசதி வாய்ப்புகள் தொடர்பாக இந்து நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இவ்வாறு வழங்கப்படும் தகவல்கள் 28 தலைப்புக்களின் கீழ் விரிவாக விளக்கப்படுகின்றது. குறிப்பாக ஒரு வணிக முயற்சியை எவ்வாறு பதிவு செய்வது?, முதலீட்டுச் சபையின் அனுமதியை எவ்வாறு பெறுவது?, ஒரு சொத்தினை எவ்வாறு பதிவளிப்பது?, வணிகம் சார்ந்த சட்டதிட்டங்களை எவ்வாறு அனுசரிப்பது?, ஊழியர் நம்பிக்கை மற்றும் சேமலாப நிதியங்களிற்கான கொடுப்பனவுகள், பங்குகளை வெளியீடு செய்யும் போதுள்ள நடைமுறைகள், ஏற்றுமதி -  இறக்குமதி சார்ந்த வர்த்தகத்தின் போதான நடைமுறைகள், .... என பல விடயங்கள் தொடர்பான விளக்கத்தினை இந்த நூல் வழங்கும்.
 
தவிரவும் வணிக முயற்சிக்கான வங்கிக் கணக்கினை எவ்வாறு ஆரம்பிக்கலாம்?, வரிகளை எவ்வாறு செலுத்த வேண்டும்?, கடவுச் சீட்டு மற்றும் அனுமதி பத்திர நடைமுறைகள் தொடர்பாகவும் இவற்றுக்கும் மேலதிகமாக யார்யாரை எல்லாம் தொடர்பு கொண்டு அறிய முடியும்? என்பன தொடர்பாகவும் தரப்பட்டுள்ளன.
 
இதனை இலங்கை மத்திய வங்கியிடமும் புத்தக சாலைகளிலும் 500 ரூபா செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும். 


This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola